பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று (13-9-2025) காலை 10 மணிக்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் கூட்டம் பொதுமேலாளர் பற்று தலைமை நிருவாகி வி. மாலதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி அவர்கள் பேசும்போது இந்த ஆலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தலைமை நிர்வாகி இன்னும் நியமிக்கப்படவில்லை. கரும்பு உதவியாளர்களுக்கு மூன்று மாதமாக பயணப்படி வழங்கப்படவில்லை. இந்த ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்று செல்லக்கூடிய ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களுக்கு டீசல் வழங்கிய டீசல் பங்குகளுக்கு பணம் 3 மாதமாக வழங்கப்படவில்லை.
ஆலையில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழிலாளர்களில் 60 வயதிற்கு மேல் ஓய்வு பெற்றவர்களை நாங்கள் இனி எடுக்க மாட்டோம் என்று இன்றைக்கு இருக்கக்கூடிய பொது மேலாளர் அவர்கள் அறிவித்து அவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பினார்கள். இதை நான் கேட்டபோது 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று பொது மேலாளர் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை தற்காலிக பணியாளர்களாக எடுத்துள்ளீர்கள். இவர்களை எந்த விதிகளின் படி (நாம்சில்) எடுத்தீர்கள். இவர்களை எடுத்ததினுடைய உள்நோக்கம் என்ன? எனவே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத உங்களிடம் எந்த கருத்தை சொல்லியும், எந்த கோரிக்கையை வலியுறுத்தியும் பயனளிக்காது என்பதால் இந்தக் கூட்டத்தை அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர்களும் புறக்கணிக்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜா சிதம்பரம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் தேவேந்திரன், பங்குதாரர்கள் சங்க தலைவர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்