Skip to content

கரூரில் 17ம் தேதி முப்பெரும் விழா…. பிரம்மாண்ட போஸ்டர்கள்

கரூரில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள்.

கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடாங்கி பட்டி பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா வருகின்ற புதன்கிழமை 17ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில்
மிகப் பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட

போஸ்டர்கள். கரூர் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாபெரும் முப்பெரும் விழா நடக்க உள்ளது. திமுகவினர் மற்றும் கரூர் மாவட்ட மாணவர் அணி தலைமையில் கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரம்மாண்ட போஸ்டர்கள் வைக்கப்பட்டது.

இதில் முதல்வர் வரும் பாதைகளில் அவரை வரவேற்கும் விதமாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கு வரலாற்று வெற்றியை பெற்றுத் தர கரூரில் கூடிய உறுதி ஏற்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களுடன் கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அடித்து உற்சாகப்படுத்தி உள்ளனர்.

error: Content is protected !!