Skip to content

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு – மைசூரு இடையே 3 சிறப்பு ரயில்கள்

தீபாவளி, தசரா மற்றும் சத் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தென்மேற்கு ரயில்வே வாராந்திர / இரு-வாராந்திர விரைவு ரயில்களை அறிவித்துள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:

மைசூர் – திருநெல்வேலி (ரயில் எண்.06239/06240):-

மைசூர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில் (ரயில் எண்.06239) 15.09.2025 முதல் 24.11.2025 வரை திங்கட்கிழமைகளில் இரவு 8.15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

திருநெல்வேலி – மைசூரு வாராந்திர சிறப்பு ரயில் ( ரயில் எண்.06240 ) 16.09.2025 முதல் 25.11.2025 வரை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 3.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் மறுநாள் அதிகாலை 05.40 மணிக்கு மைசூருவை சென்றடையும்.

பெட்டி அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 10- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள்.

மைசூர் – காரைக்குடி – (ரயில் எண்.06243/06244) :-

மைசூர் – காரைக்குடி இரு வார சிறப்பு ரயில் (ரயில் எண்.06243) 18.09.2025 முதல் 29.11.2025 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு காரைக்குடியை சென்றடையும்.

காரைக்குடி – மைசூர் இரு வார சிறப்பு ரயில் (ரயில் எண்.06244) 19.09.2025 முதல் 30.11.2025 வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு மைசூரை சென்றடையும்.

பெட்டி அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி , 3- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 10- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள்

மைசூர் – ராமநாதபுரம் (ரயில் எண்.06237/06238) :-

மைசூர் – ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண்.06237 ) 15.09.2025 முதல் 27.10.2025 வரை திங்கட்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு மைசூரில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 10.00 மணிக்கு ராமநாதபுரத்தை அடையும்.

ராமநாதபுரம் – மைசூர் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண்.06238) செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு 16.09.2025 முதல் 28.10.2025 வரை மறுநாள் காலை 07.45 மணிக்கு மைசூரை அடையும்.

பெட்டி அமைப்பு: 2- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 5- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 8- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி & 1- லக்கேஜ் கம் பிரேக் வேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

error: Content is protected !!