சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம் நடந்து சென்றார். அப்போது, தெருநாய் ஒன்று முகமது நஸ்ருதீனின் முழங்காலில் கடித்தது; உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டு வீடு திரும்பினார். இதன்பின், கடந்த 12ம் தேதி, முகமது நஸ்ருதீனுக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மாற்றம் சிகிச்சையின் போது, அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதால், ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தனி அறையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். தெருநாய் கடித்து, ஆட்டோ ஓட்டுநர் ரேபிஸ் பாதித்து உயிரிழந்திருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.