Skip to content

அண்ணா பிறந்தநாள்.. மயிலாடுதுறையில் திமுக சார்பில் மரியாதை…

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் இருந்து திமுகவினர் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் பேரணியாக பழைய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முன்னிறுத்தி உறுதிமொழியை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுகொண்டனர்.

error: Content is protected !!