இன்றைய தினம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சசிகலா, அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவரது எண்ணங்களை எம்.ஜி.ஆர் நிறைவேற்றியதாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர் அண்ணா, அண்ணாவின் எண்ணங்களை எம்ஜிஆர் நிறைவேற்றினார். 3 படி அரிசி லட்சியம், 1 படி அரிசி நிச்சயம் எனக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டு அதை செய்தவர் அண்ணா.
அண்ணா, அண்ணா என அனைவரும் சொல்வார்கள். அண்ணா காட்டிய வழியில் ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா” என்றார். அண்ணாவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியை உறுதி செய்தவர் என்பதை சசிகலா இதன் மூலம் வலியுறுத்துகிறார்.