வாலிபருக்கு கத்தி குத்து.. ஒருவர் கைது
சென்னை டி.நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் கபீர் முகமத் (26. ) இவர் திருச்சியில் மேல கல்கண்டார் கோட்டைசோமசுந்தரம் நகர் பகுதியில் உள்ள தன் மனைவியைக் காண திருச்சிக்கு வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ரெண்டா ரெனிஷ் (23) என்ற வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த வாலிபர் கபீர் முகமதை கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளார் .இதில் காயமடைந்த கபீர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து ரெண்டா ரெனிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த அபி (24 )என்ற வாலிபரை தேடி வருகின்றனர். கைதான வாலிபரிடமிருந்து கத்தி, 30 போதை மாத்திரைகள், இரண்டு பாட்டில்கள் மற்றும் இரண்டு மருத்துவ ஊசிகள்பறிமுதல் செய்யப்பட்டது
வாலிபர் உள்பட 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
திருச்சி பாலக்கரை தெற்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் தினேஷ் (30 ).இவரது சகோதரி சரண்யாவிற்கும் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் (38). என்ற வாலிபருக்கும் திருமணம் ஆனது. இந்த நிலையில் சரண்யா கர்ப்பமாக இருந்தார் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததன் காரணமாக சரண்யா திருச்சியில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை காண கண்ணன் திருச்சி வந்தார். அப்போது தன் மனைவியையும் குழந்தையையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். இதையடுத்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது .இதை கேட்ட போது சரண்யாவின் சகோதரர் தினேஷை அவர் அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். மேலும் இதை தடுக்க வந்த தினேஷின் தந்தை சுந்தரமூர்த்தி மற்றும் தாய் அமுதா மற்றும் அவரது சகோதரர் செந்தில்குமார் ஆகியோரையும் வெட்டியுள்ளார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாடியில் இருந்து விழுந்த வாலிபர் பரிதாப சாவு
திருச்சி திருவானைக்கோவில் முறைக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( 26 ) இவர் அதே பகுதியில் உள்ள கட்டடத்தில் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார் மேலும் இவர் குடிப்பழத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இந்த நிலையில் அவர் தன் குடியிருக்கும் வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடையில் வேலை பார்த்த ஊழியர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி மாவட்டம் , முசிறி வெள்ளூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (56. ) இவரது மனைவி செல்வமணி (47 ) .இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜசேகர் மரக்கடை பகுதியில் உள்ள மின்சாதன பொருட்கள் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று ராஜசேகர் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென மயங்கினார் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தாலும் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.