அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியரின் கூட்ட அரங்கு வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள்
நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஆட்சியர் இரத்தினசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.