Skip to content

தஞ்சை கல்லணை கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவில் வசித்து வரும் சஞ்சீவ் குமார் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன். (15). 16ம் தேதி மாலை அதே பகுதி வழியாக பாயும் கல்லணை கால்வாய் ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்து போது நீரின் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டான். உடனடியாக உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை பில்லுக்கார தெரு கல்லணை கால்வாய் படித்துறையில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் நேற்று ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கிய சிறுவன் கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சிறுவனின் உடல் உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல் துறையினர்.

error: Content is protected !!