Skip to content

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் செத்து போன எலி!. துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள டீ

கடையில் ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற பெயரில் இருந்த குர்குரேவை 4 பாக்கெட் வாங்கி சென்றுள்ளார். அப்போது 3 பாக்கெட்டுகளில் இருந்த குர்குரே வை குழந்தைகள் சாப்பிட்டு உள்ளனர்.

அதில் ஒரு சிறுவன் கையில் வைத்து கொண்டு நெயில் பாலிஷ் போட்டு இருந்ததால் அதனை அந்த பாக்கெட்டில் தடவி விளையாடி விட்டு பிறகு சாப்பிட பாக்கெட்டை பிரித்து பார்த்த போது அதில் கருப்பான எலி இறந்த நிலையில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் அருகில் உள்ள கடைக்கு சென்று நடந்ததை கூறியுள்ளனர்.

நாங்களும் வெளியில் தான் வாங்குகிறோம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது சம்பந்தப்பட்ட நபர்களிடம் நாங்கள் இதைப் பற்றி கூறுகிறோம் என்று சொல்லி அனுப்பி உள்ளனர். இதனால் செய்வது அறியாது திகைத்த குடும்பத்தினர் எலி இறந்து கிடந்தது குறித்து விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பரவச் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட கம்பெனி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இதுபோன்று இனி வருங்காலங்களில் குழந்தைகள் சாப்பிடும் பொருளை அஜாக்கிரதையாக பாக்கெட் செய்யக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் நாட்றம்பள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!