Skip to content

பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

கோவை உக்கடம் பகுதியில் இருந்து இன்று அதிகாலையில் பொள்ளாச்சி பகுதிக்கு அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் 52 வயது என்பவர் 30 பயணிகளுடன் பேருந்து பொள்ளாச்சி நோக்கி கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கி வந்துள்ளார் அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சி பட்டி பகுதியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த எல் பி ஜி டேங்கர் லாரி மீது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை

பகுதி சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் பாலசுப்பிரமணி 44 வயது என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரத்தில் நின்ற லாரி மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் நடத்துனர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!