கரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7- மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நேரில் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆறுதல் கூறினார். கரூர்,சாலபாளையம் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த நவீன்-ரேணுகா தம்பதியினர் ரேணுகா நியாயவிலை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவர் 7 மாத கர்ப்பிணையாக உள்ளார்.
நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் கரூரில் இருந்து வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கோவை சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது தண்ணீர் பந்தல் பகுதியில் வந்த பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதி
விபத்துக்குள்ளானது. விபத்தில் 7- மாத கர்ப்பிணியாக இருந்த ரேணுகா மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த நிலையில் கணவர் நவீன் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து ரேணுகா உடலை உறவினர்கள் பெற்றுச் சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.