கோவை அருகே காவலர் என்று கூறி கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை, வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி செய்து வருகிறார். கடந்த வாரத்தில் இவர் அவரது வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு பேர் தங்களை காவலர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் செந்தில்குமாரிடம் நீங்கள் வங்கி கணக்கு மூலம் ஏராளமான தொகை பரிவர்த்தனை செய்து உள்ளீர்கள், எனவே அது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறி உள்ளனர்.
அதற்கு அவர் துணி மாற்றி வருகிறேன் என்று கூறி வீட்டுக்குள் சென்றார். அப்பொழுது அவரின் பின்னால் அந்த இரண்டு பேரும் சென்றனர். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் ஏன் ? உள்ளே வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த இரண்டு பேரும் செந்தில்குமாரை தாக்கி விட்டு வீட்டில் நகை, பணம் எங்கு ? இருக்கிறது. அதை சொல் இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அப்பொழுது திடீரென செந்தில்குமார் அந்த நபர்களை பிடியில் இருந்து விடுபட்டு வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டி கொண்டார். அத்துடன் அவர் தனது செல்போன் மூலம் அக்கம், பக்கத்தில் பேசி உதவிக்கு அழைத்தார். ஆனால் அதற்குள் அந்த இரண்டு பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து புகார் பேரில் வடவள்ளி காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் காவல் துறையினர் வடவள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக ஜிப்பில் வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோவை ஜி.என் மில்ஸ் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகுமார், இராமநாதபுரம் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜிம்சன், இடிகரை கார்த்திக் என்பதும் வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமாரிடம் காவலர் என்று கூறும் மிரட்டி கொள்ளை அடிக்க முயன்றவர்கள் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது விஷ்ணு குமாரும், செந்தில்குமாரும் நகை பணம் அதிகமாக இருப்பதை விஷ்ணுகுமார் தெரிந்து கொண்டார் எனவே அதை கொள்ளை அடிக்க தனது நண்பர்களான ஜின்சன், கார்த்திக் ஆகியோரிடம் கூறினார். மூன்று பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி காவல் துறையினர் போன்று நடித்துக் கொள்ளை அடிக்க முயன்றனர். ஆனால் அவர் அதற்குள் மற்றொரு அறைக்குள் சென்று பூட்டி கொண்டதால், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. மேலும் இந்த வழக்கில் எத்தனை ? பேருக்கு தொடர்பு உள்ளது. என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.