ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரைப்பை குடல் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்ட நிலையில், பல உடல் உறுப்புகள் திடீரென செயல் இழந்த நிலையில், அவரை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் செப்டம்பர் 18ம் தேதி இரவு 9:05 மணியளவில் அவரது உயிர் பிரிந்து விட்டதாக ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ரோபோ சங்கர் மரணம் நிகழ்ந்தது எப்படி? ரோபோ சங்கர், செப். 16 அன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப் போக்கு இருந்தது. மேலும் உள் உறுப்புகள் செயலிழந்த நிலையில் வயிற்றுப்பகுதியிலும் மிக தீவிரமான பிரச்னைகள் இருந்தன. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு எங்கள் மருத்துவர்கள் தொடர்ந்த சிகிச்சை அளித்த போதிலும் பலன் அளிக்கவில்லை. செப் 18 அன்று இரவு 9.05 மணிக்கு உயிரிழந்தார்.” ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வௌியிட்டது.