Skip to content

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை கைப்பற்றிய போலீசார்.

கள்ள நோட்டு வழக்கில் தாந்தோணி மலையைச் சார்ந்த காண்டீபன் 52, திருச்சியைச் சார்ந்த ராஜேந்திரன் 44, சென்னையில் வசிக்கும் சேலத்தைச் சார்ந்த ஜெயக்குமார் 48, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சானு 44, ஆந்திராவைச் சார்ந்தவர் தற்பொழுது சென்னையில் வசித்து வரும் அர்ஜீன்(எ) விஜயகுமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

கரூரில் கடந்த 09.09.2025 ஆம் தேதி தாந்தோணிமலையில் உள்ள டாஸ்மாக் கடை எண்.4924-இல் காண்டீபன், வயது 52, என்பவர் ரூ.500/- கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்படி கடையில் இருந்த மேற்பார்வையாளர் வேணுவிஜய் என்பவர் காண்டீபன் கொடுத்த ரூ. 500/- கள்ளநோட்டாக இருப்பதாக சந்தேகத்தின்பேரில் தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு சென்று கொடுத்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து அவரிடமிருந்து 21 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 10,500/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவல் பெற்று, கரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி கள்ள நோட்டு வழக்கு சம்மந்தமாக ஜோஷி நிர்மல் குமார், IPS, காவல்துறை தலைவர், மத்திய மண்டலம், திருச்சி உத்தரவுப்படி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில், கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், பசுபதிபாளையம் வட்ட ஆய்வாளர் சதீஸ்குமார் மற்றும் வாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் சையது அலி

 

ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளி காண்டீபன் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியில் உள்ள ராஜேந்திரன், வயது 44, மயிலாடுதுறை என்பவரை 12.09.2025 ஆம் தேதி கைது செய்து, அவரிடமிருந்து 2 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 1,000/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவல் பெற்று, கரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சென்னையில் வசிக்கும் சேலத்தை சேர்ந்த ஜெயக்குமார். மார், வயது 48, சஞ்சீவிராயன்பேட்டை, சேலம் (தற்சமயம்) காலேஜ் ரோடு, கூடுவாஞ்சேரி, ஐய்யப்பன்தாங்கல், சென்னை என்பவரை 13.09.2025 ஆம் தேதி கைது செய்து அவரிடமிருந்து கள்ள நோட்டு தயாரிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் 20 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 10,000/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவல் பெற்று, கரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய தனிப்படையினர் கேரளா மற்றும் ஆந்திரபிரதேசம் மாநிலங்கள் சென்று சானு, வயது 44, கன்னியார் நாடா ரோடு, குமுளி, பாச்சலூர் அஞ்சல், திருவனந்தபுரம், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த அர்ஜுன் (எ) விஜயக்குமார் (தற்சமயம்) சென்னை ஆகியோர்களை

20.09.2025 ஆம் தேதி கைது செய்து கேரளாவை சேர்ந்த சானு என்பவரிடம் கள்ளநோட்டு ரூபாய் 6 இலட்சத்தை கைப்பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பலரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கள்ளநோட்டு வழக்கில் தொடர்புடைய 05 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வழக்கு தொடர்பான கள்ள நோட்டு மற்றும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படும் இயந்திரம் மற்றும் உபகரணங்களை கைப்பற்றிய கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா பாராட்டினர்.

error: Content is protected !!