Skip to content

மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர் கொட்டித்தீர்த்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும். கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் சாலை, ரெயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நேற்று பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், மரம் முறிந்து விழுந்து, வீடு இடிந்து என பல்வேறு விபத்துகளில் பலர் காயமடைந்தனர்.

 

error: Content is protected !!