கோவை, பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள ஆலமரத்து அம்மன் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் இன்று திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது.குப்பை கிடங்கில் பண்டல் – பண்டலாக பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காகித பொருட்கள் இருந்ததால்,சிறிதளவு பற்றிய தீ, காற்றின் வேகத்தில் மள மள வென எறிய துவங்கியது .இதனால் விண்ணை மட்டும் அளவு கரும்புகை வெளியேறியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விரைவாக போராடி தீயை அணைத்தனர்.
பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.
- by Authour
