வால்பாறை சாலக்குடி செல்லும் சாலையில் கொம்பன் கபாலி சாலை மறித்து அட்டகாசம், விரட்டும் பணியில் வனத்துறையினர், வால்பாறை-செப்-24 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன தற்போது கேரளா வனப்பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானை கூட்டங்கள் வால்பாறை நோக்கி படையெடுத்து வருகிறது இந்நிலையில் வால்பாறை சாலக்குடி அதிரப்பள்ளி செல்லும் சாலையில் கொம்பன் கபாலி ஒற்றைக் காட்டு யானை தனியார் பேருந்து மற்றும் கேரளா அரசு பேருந்துகளை துரத்துவதும் சுற்றுலா செல்லும் பயணிகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தாக்குவதும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அடர் வனப்பகுதிக்குள் கேரளா வனத்துறையினர் விரட்டினாலும் மீண்டும் பகல் நேரங்களில் சாலைகளில் உலா வருகிறது தற்போது சாலக்குடி அருகே உள்ள அம்பலப்பாரா என்ற இடத்தில் மரத்தை ஒடிந்து சாலையின் குறுக்கே நின்றதால் அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் ஈடுபட்டு உள்ளனர் மேலும் அப்பகுதியில் குட்டியுடன் யானை கூட்டம் சாலையில் உலா வருகிறது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் யானைகளை கண்டால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்துள்ளனர் மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் .
வால்பாறை… ”கொம்பன்-கபாலி யானை” சாலையை மறித்து அட்டகாசம்….
- by Authour
