பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த நிலையில் இசையப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை கோப்புக்கு எடுத்துக்கொண்ட, முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, செப்டம்பர், 25ம் தேதி இருவரும், நேரில் ஆஜராக உத்தரவிட்டார். கணவன் மனைவி 6 மாதம் பிரிந்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று தீர்ப்பு
- by Authour
