சென்னையை சேர்ந்த அஞ்சலை (52) என்பவர் ரயிலில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை லாவகமாக பறித்து சென்றுள்ளனர். இதனால் மூதாட்டி கத்தி கூச்சலிட்டதால் 2 வாலிபர்கள் தப்பி ஓடி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடி உள்ளனர். சி.சி.டி.வி உதவியுடன் குற்றவாளிகளை தேடி பார்த்ததில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த உசும்பூர் பகுதி சேர்ந்த மாரியப்பன் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் உடன் வந்த தென்காசி மாவட்டம், தேவிபட்டினத்தைச் சார்ந்த கார்த்திக் (22) ஆகிய இருவரும் சேர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது
- by Authour
