Skip to content

தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம்.

தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 22.ம் தேதி சிறப்பாக தொடங்கியது, இதனையடுத்து நான்காம் நாளாக இன்று ஸ்ரீ பெரியநாயகி

அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது, மேலும் நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தும் சுவாமியை தரிசனமும் செய்தனர்.

error: Content is protected !!