தமிழக மக்களுக்கு சமூக நீதிக்கான உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலை உரிமை, விவசாயி மற்றும் உணவுக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார் டெல்டா பகுதியில் நடை பயணம் மேற்கொண்டு வரும் அவர் நேற்று இரவு திருச்சி வருகை தந்தார். பின்னர் இன்று காலை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தனது மனைவி சௌமியா அன்பு மணியுடன் சாமி தரிசனம் செய்தார் அதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர் அப்போது அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது ரங்கநாதர் கோவிலில் கருடாழ்வார் ரங்கநாத சுவாமி சன்னதிகளில் பயபக்தியுடன் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அதன் பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினார் பின்னர் இன்று மாலை ஆறு மணிக்கு திருச்சி பெரிய கடைவீதியில் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மேற்கொள்கிறார் சின்னக்கடை வீதி வழியாக சறுக்குப் பாறை பகுதிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர்கள் திலீப் குமார் ,உமாநாத், பிரின்ஸ் ,கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
திருவானைக்காவல் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமிதரிசனம்..
- by Authour
