Skip to content

மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி வக்கீல் மீது தாக்குதல்

திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018 அல்லது புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்தார். பின்னர் அவர் அந்த தொகையை திரும்ப செலுத்தவில்லை. அதைத்தொடர்ந்து அமுதா மீது அருண்குமார் நீதிமன்றம் மூலமாக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இதை அறிந்த அமுதாவின் உறவினர் வினோத்குமார் ஆத்திரமடைந்தார் பின்னர் எடத்தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த அருண்குமாரிடம் வழக்கை வாபஸ் பெற சொல்லி மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வினோத்குமார் மீது பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசுவை திருடிய வாலிபர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை ( 64 )இவர் பசு மாடு வளர்த்து வருகிறார் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு ஒரு பசு மாட்டை கட்டி இருந்தார் நள்ளிரவு மர்ம நபர்கள் அந்த பசுமாட்டை திருடி சென்று விட்டனர் இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .இதில் குளித்தலை பழைய மருத்துவமனை தெரு பகுதியைச் சேர்ந்த கர்ணன் ( 21) என்பவர் பசுமாட்டை திருடி சென்றது தெரிய வந்தது அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய நபர் தற்கொலை

திருச்சி பாலக்கரை திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் வயது 44 இவர் சையது ரஃபி 43 என்பவரை கலப்புத் திருமணம் செய்தார். பின்னர் அரபு நாட்டில் வேலை பார்த்து வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு
நாடு திரும்பினார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார் இருப்பினும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டின் அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு மது அருந்தினார் அதன் பின்னர் அங்குள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது குறித்து அவரது மனைவி சையது ரஃபி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!