இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நாமக்கல் மாவட்டத்தில் முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமான குவிந்து வருகின்றனர். அங்கு உள்ள மரத்தின் மீது இளைஞர் ஒருவர் மேலே ஏறிக்கொண்டு அமர்ந்திருந்தார் அங்கிருந்த தவெக நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் கீழே இறங்கும்படி கூறினார்.அதனை பொருட்படுத்தாமல் அவர் மேலேயே அமர்ந்திருந்தார் அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு கீழே இறங்கினார். தவெக தலைவர் விஜய் மரத்தின் மீது யாரும் ஏறக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் அதனையும் பொருட்படுத்தாமல் விஜய் வருவதற்கு முன்பாகவே மரத்தின் மீது ஏறினார்.

