Skip to content

கரூர் விஜய் கூட்டத்தில் 29 பேர் உயிரிழப்பு… பரபரப்பு

  • by Authour

கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தில்  29 பேரை் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு என தகவல் வௌியாகியுள்ளது.  கரூர் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்துள்ளனர். கரூரில் இருந்து வரும் செய்தி மிகவும் மன வேதனை அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். கரூருக்கு நாளை விரைகிறார் முதல்வர் ஸ்டாலின். கரூர் விரைந்து செல்லும்படி அமைச்சர்கள் மகேஸ், மா.சுப்பிரமணியனுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். கரூர் மாவட்ட கலெக்டரிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு என தகவல் வௌியாகியுள்ளது. 58 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூரில் துயரம்.. பதறுகிறது நெஞ்சம் என மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!