Skip to content

அரியலூர்..கோதண்ட ராமசாமி கோவிலில்.. யானை வாகனத்தில் சீனிவாச பெருமாள் வீதி உலா

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவிலில் ஆகும். இக்கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேரோட்ட திருவிழா கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6ம் நாளான இன்று சீனிவாச பெருமாள் யானை வாகனத்தில் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேளதாள கச்சேரி, மோகினி ஆட்டம், கேரளா மோளத்துடன் வீதி உலா வந்த சீனிவாச பெருமாளுக்கு, வீடுதோறும் பக்தர்கள் தேங்காய், பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை காணிக்கையாக வைத்து சீனிவாச பெருமாளை வரவேற்று குடும்பத்துடன் வணங்கினர். ஆண்டாள் வேடமடைந்த சிறுமியை நடுவில் வைத்து பெண் பக்தர்கள் கோலாட்டம் கும்மியாடி, சீனிவாச பெருமாளை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நாளை மாலை கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு புஷ்ப விமானத்தில் சீனிவாச பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!