2024- 25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக ad hoc போனஸ் இவர்களுக்கு கிடைக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகை 6,908 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் 31 , 2025 இல் பணியில் இருக்கும் மற்றும் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . ஒரு ஊழியர் ஒரு ஆண்டு முழுவதும் வேலை செய்யவில்லை என்றால் அவர் பணிபுரிந்த மாதங்களின் அடிப்படையில் அதாவது விகிதாச்சார அடிப்படையில் போனஸை பெறுவார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பினை மத்திய நிதி அமைச்சகம் அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. பாரா மிலிட்டரி படைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஊழியர்கள் இதில் பலனடைவார்கள். அதே போல யூனியன் பிரதேசங்களில் வேலை செய்யக்கூடிய வேறு போனஸ் பெற தகுதி இல்லாத மத்திய அரசு ஊழியர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
இந்த தீபாவளி போனஸை பெறுவதற்கு மாதந்தோறும் அதிகபட்ச சம்பளமாக 7 ஆயிரம் ரூபாய் என கணக்கீடு கொண்டு வழங்கப்படுகிறது. உதாரணமாக 30 நாட்கள் போனஸ் என்பது 7,000 × 30 ÷ 30.4 = ரூ. 6,907.89 (அதாவது ரூ. 6,908). என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் குரூப் சி , நான் கெஸட்டட் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் என லட்சக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர்.
யாரெல்லாம் பயனடைவார்கள்?
– இந்த போனஸ் மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப்படைகளின் தகுதியுள்ள ஊழியர்களுக்கும் கிடைக்கும்.
– இது மத்திய அரசின் ஊதியக் கட்டமைப்பில் பணிபுரியும் மற்றும் வேறு எந்த போனஸ் அல்லது கருணைத் தொகையைப் பெறாத யூனியன் பிரதேசங்களில் (UT) உள்ள ஊழியர்களுக்கும் பொருந்தும்.
– தங்கள் சேவையில் எந்த இடைவேளையும் இல்லாமல் பணிபுரிந்த அட்-ஹாக் பணியாளர்களும் இதற்கு தகுதியுடையவர்கள்.
– கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் பணியாற்றிய அனுபவமுள்ள கேஷுவல் தொழிலாளர்களும் போனஸுக்குத் தகுதியுடையவர்கள். இந்த ஊழியர்களுக்கான போனஸ் தொகை ரூ.1,184 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போனஸ் எவ்வாறு கணக்கிடப்படும்?
அதிகபட்ச மாத சம்பளம் ரூ.7,000 என்ற அடிப்படையில் போனஸ் கணக்கிடப்படும். எடுத்துக்காட்டாக, ரூ.7,000 சம்பளத்தில் 30 நாள் போனஸ் பின்வருமாறு கணக்கிடப்படும்:
7,000 × 30 ÷ 30.4 = ரூ.6,907.89 (ரூ.6,908 ஆக ரவுண்ட் ஆஃப் செய்யப்படுகிறது).
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: சுருக்கமாக….
– மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
– மார்ச் 31, 2025 வரை பணியில் இருந்த ஊழியர்கள் மட்டுமே போனஸுக்குத் தகுதியுடையவர்கள்.
– இந்த தேதிக்கு முன் ஓய்வு பெற்ற, ராஜினாமா செய்த அல்லது காலமான ஊழியர்களில் – குறைந்தது ஆறு மாத வழக்கமான சேவையைக் கொண்டவர்கள் மட்டுமே போனஸ் பெற தகுதியுடையவர்கள்.