பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய அளவில் வில்வித்தை போட்டி நடைபெற்று உள்ளது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிங் வில் வித்தை அகாடமியை சேர்ந்த வில் வித்தை போட்டியில் கலந்து கொண்ட விருத்திகா,வம்சிகா ஹரிணி கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்ற 3 மாணவிகளும் வெள்ளி பதக்கம் வென்று வீடு திரும்பிய அவர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் உற்சாக
வரவேற்பு அளித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவிகளை, கிங் வில் வித்தை அகாடமி நிறுவனர் மற்றும் மாணவிகளின் பயிற்சியாளர் ராஜா, உதவி பயிற்சியாளர்கள் வெங்கடேசன், அஜித்குமார், லோகேஷ், சக்தி மற்றும் பவன்குமார், பெற்றோர்கள், நண்பர்கள் அனைவரும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அவர்கள் வெள்ளி பதக்கம் வெற்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது