வால்பாறை செல்ல உள்ளூர்வாசிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு 24 மணி நேரமும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியை பாலசுப்ரமணியம் ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார் வால்பாறையில் உள்ள கடையில் இறக்கிவிட்டு அதிகாலை 2 மணி அளவில் பொள்ளாச்சி நோக்கி மலைப்பாதையில் வரும்பொழுது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே வரும்பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வலது புறம் உள்ள தடுப்பு
சுவர் மீது மோதி உடைத்துக் கொண்டு சுமார் 200 அடி மலைப்பாதை வழியாச வந்து இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள சாலையின் குறுக்கே விபத்துக்குள்ளானது இதனை அடுத்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவ்வழியாக வந்த லாரியில் கயிறு கட்டி ஈச்சர் வாகனத்தை இழுத்து போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் மலைப்பாதையில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் ஈச்சர் வாகனம் ஓட்டி வந்த பாலசுப்ரமணியம் எவ்வித காயங்கள் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.