Skip to content

கரூரில் ஐஜி தலைமையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியது…

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வடக்கு மண்டல ஐ ஜி அஸ்ரா கார்க் தலைமையில் 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கினர்.

ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான நாமக்கல் எஸ்.பி விமலா மற்றும் சிவில் சப்ளை சிஐடி எஸ்.பி சியாமளாதேவி அடங்கிய எஸ்ஐடி குழுவினர் கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் சம்பவ இடத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் உள்ளூர் போலீசார் கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள், மரம் புரிந்து கீழே விழுந்தவர்கள், சாக்கடைகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்களையும், இதுவரை நடந்த விசாரணை குறித்தும் விளக்கினர். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை காண்பித்து, இதுவரை கைப்பற்றப்பட்ட தடயங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். சுமார் 1 மணி நேரமாக நிமிடத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதிக உயிர் பலிகள் ஏற்பட்ட காவல்துறை கட்டுப்பாட்டு வளையத்துக்குள் உள்ள பகுதியில் 30 நிமிடத்திற்கு மேலாக ஆய்வில் ஈடுபட்ட ஐ.ஜி அஸ்ரா கார்க் குழுவினர், அந்த பகுதிக்கு எதிர் திசையில் உள்ள வணிக கட்டிடங்கள் அமைந்துள்ள மற்றொரு பகுதியிலும் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வில் ஈடுபட்ட ஐ.ஜி செய்தியாளர்களை சந்தித்தார்,

உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை இப்போதுதான் தொடங்கி உள்ளது. விசாரணை குழுவில் 2 எஸ்.பிக்கள், 1 ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர மற்ற எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது.
விசாரணை விவரங்களை மேற்கொண்டு நானே சொல்கிறேன் என்றார்.

error: Content is protected !!