பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிவிகிறது.
இன்று மாலை செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்கிறார்கள். அப்போது தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. பீகாரில் தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது