Skip to content

தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

கரூர் துயரச் சம்பவத்தில் பொறுப்பேற்காமல் தப்பித்து ஓடிய விஜய் மற்றும் தவெகவினரை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1.கண்ணன், வயது 24, புதுக்கோட்டை

2.டேவிட், வயது 25, பர்கூர், கிருஷ்ணகிரி

3.ஹஸ்தினாபுரம் சசி @சசிகுமார், வயது 48, சென்னை (பெருந்துறையில் உள்ள நிறுவனத்தில் Time Officer)

இவர்கள் மூவரும் சமூக வலைதளங்களில் நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பித்து அவமதிக்கும் வகையில் பதிவுகள் வெளியிட்டதற்காக்வும், அதில் கரூர் துயரச் சம்பவம் குறித்து நீதிபதி வெளியிட்ட கடுமையான கருத்துகளை குறைத்து மதிப்பிடும் வகையிலும், தவறான தகவல்களையும் பரப்பி இருக்கிறார்கள். இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேற்கண்ட 3 பேரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!