பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது .
திருவிளக்கு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆலய நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்ட பிறகு 1008 நாமாவளிகள் கூறிய பிறகு திருவிளக்குக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.