Skip to content

புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், காட்டூர் 39வது வார்டு – கணேஷ் நகர் பகுதியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ்   திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இளநிலை பொறியாளர் நரசிங்கமூர்த்தி, சக்திவேல், கணேஷ் நகர் நல சங்க தலைவர் மணிவண்ணன், பொது செயலாளர் ரவி, பொருளாளர் அண்ணாதுரை, அமைப்பு செயலாளர் அடைக்கல தாஸ், துணை தலைவர்கள் சாந்திராஜ்,  அண்ணாதுரை, சரோஜா, துணை செயலாளர் தியாகராஜன், வடிவேலு, முரளிதர், ராமசந்திரன், லாசர், ராதாகிருஷ்ணன், வில்லியம்ஸ், சத்யராஜ், தேவராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!