வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடத்தில் அகற்றப்படாமல் இருந்த காலணிகள் அனைத்தும் தற்போது அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஒன்று கூடியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு 41 நபர்கள்
உயிரிழந்துள்ளனர் . இச்சம்பவம் உலகம் முழுவதும் பெறும் அதிசியும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதியைத் தவிர மற்ற இடங்களில் இருந்த காலணிகள், கட்சி துண்டுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது.
உயிரிழப்புகள் அதிகமாக நடந்த இடத்தை சுற்றி போலீஸ் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்தாமல் இருந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு இன்று காலணிகள் கட்சி துண்டுகள் மற்றும் அங்குள்ள பொருள்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களைக் கொண்டு முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.