கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் ஹுலிகி நகரில் ஹுலிகியம்மா தேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு பண்டிகை காலங்களில் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று அம்மனை வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடகு மாவட்டம் தலிஹல் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹுலிகியா தேவி அம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளனர். ஹுலிகி அருகே இன்று பாத யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வேகமாக வந்த ஆம்னி பஸ் பக்தர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
