இமாச்சலபிரதேச மாநிலம் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குளு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், பிலஸ்பூரின் பாலு நகர் உள்ள பாலம் அருகே மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஆம்னி பஸ் சிக்கிக்கொண்டது. பஸ் முழுவதும் பாறைகள் விழுந்து, பஸ் முழுவதும் மண் மூடியது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்துச் என்று நிலச்சரிவால் மண்ணுக்குள் சிக்கிய பஸ்சில் இருந்தவர்களை மீட்க முயற்சித்து வருகின்றனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
