கரூரில் நடந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 45 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000 காசோலைகளை வழங்கிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி.
கரூரில் கடந்த மாதம் 27 – ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ள நிலையில் தமிழக முதல்வர் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு 10
லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை வழங்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இன்று முதல் கட்டமாக 45 நபர்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து கரூரில் உள்ள காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் முருகேஸ்வரிடம் காசோலைகளை வழங்கினார்.
இதில் அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.