Skip to content

ஆட்டோ டிரைவரை காரில் தரதரவென இழுத்து சென்ற போதை ஆசாமிகள்

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து சரக்கு ஆட்டோ ஓட்டுநர். இவர் அப்பகுதியில் அவரது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த போது காரில் வந்த நான்கு பேர் தாறுமாறாக ஓட்டிக் கொண்டு சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதுவது போன்று சென்றனர். இதைப் பார்த்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சுடலை முத்து ஏன் ? இவ்வாறு செல்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார். இப்பொழுது அந்த நான்கு பேரும் மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசி, கேள்வி எழுப்பிய சுடலை முத்துவை இரும்பு இரும்பு கம்பியால் தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கி விட்டு செல்ல முயன்றனர். இந்நிலையில் சுடலைமுத்து அவர்களின் காரை மறிக்க முயன்றார். அவரின் கழுத்தைப் பிடித்து தரதரவென காரில் இழுத்துக் கொண்டு சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கொலை செய்ய முயன்றனர் அந்தக் குடிபோதை ஆசாமிகள் நான்கு பேர். சுதாரித்துக் கொண்ட சுடலைமுத்து காரில் இருந்து கையை தட்டி விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார். அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலை 26 மற்றும் முகத்தில் 8 இடங்களில் தையல் போட்டு உள்ளனர். தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார் சுடலைமுத்து.

இந்நிலையில் மது போதை ஆசாமிகள் சுடலைமுத்துவைக் காரில் தரதரவென இழுத்துச் செல்லும் போது அங்கு சாலையில் அருகே உள்ள நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!