Skip to content

வீட்டில் தனியாக பெண்ணை தாக்கி 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலு. கொத்தனார். இவரது மனைவி லட்சுமி (52). நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் லட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் 5 பேர் மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டின் பின்வாசல் வழியாக நுழைந்து லட்சுமியை தாக்கி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மூக்குத்தி, தோடு என 6 பவுன் நகைகள் மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் நகைகள் என மொத்தம் 15 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பி சென்று விட்டனர். வீடு திரும்பிய பாலுவிடம், லட்சுமி நடந்ததை கூறியுள்ளார். உடனடியாக இதுகுறித்து பாலு கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!