மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. காசோன்ஸ் ஆற்றின் கரையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் கார்கள் அடித்து செல்லப்பட்டன.
நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிக்கான 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.