கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானை கூட்டங்கள் தேயிலைத் தோட்டம் மற்றும் வால்பாறை சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைக் கூட்டங்கள் வராமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றியும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்து வருகின்றனர், இரவு நேரம் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைக் கூட்டங்கள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து கதவுகளை உடைப்பதும் ரேஷன் கடை சேதப்படுத்துவதும் இருந்து வருகிறது .
இந்நிலையில் இன்று அதிகாலை ஊமையாண்டி முடக்குப் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் உள்ளே புகுந்த காட்டு
யானை அப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி அசலா மற்றும் அவர்களது பேத்தி ஹேமா ஸ்ரீ ஆகியோரை வீட்டில் உள்ளே புகுந்து தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்க வனத்துறையினர் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு இருவரும் உடல் வைக்கப்பட்டுள்ளது வனத்துறையினர் அப்பகுதியில் முகமூட்டுள்ள யானை கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்கல் பகுதியில் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சேதப்படுத்தியது யானை கூட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது மூதாட்டி சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .