திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மின்னஞ்சல் அனுப்பியது
யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 2ம் தேதியும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 2ம் தேதியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்த சம்பவத்தை தொடர்ந்து, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்