தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூரை சேர்ந்தவர் கிருபாகர். இவருடைய மகள் கீர்த்தனா (19) ஐதராபாத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்துள்ளார். கல்லூரியில் நடத்தும் பாடம் தனக்கு சரியாக புரியவில்லை என தினமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குடும்பத்தினரிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரை விடுமுறையில் வீட்டிற்கு வரவழைத்து வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். வீட்டிற்கு வந்த கீர்த்தனா, தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
