பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ் – சஹர்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த கரிப் ரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12204) ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலை 7.30 மணியளவில் ஒரு ஏசி பெட்டியில் தீ பற்றியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகை எழுவது கவனிக்கப்பட்டவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக பிற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர் . உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
ரயிலிலிருந்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனினும், சில ஆரம்ப தகவல்களில் ஒரு பயணி சிறு காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மூன்று பெட்டிகள் தீயினால் சேதமடைந்தன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.