கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 4.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ, செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
இந்தநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல் , மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக , கரூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி, காந்தி நகர் பிசி குடியிருப்பில், தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி, பெரிய வடுகப்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில், புதிய மினி சமுதாயக் கூடம், மண்மங்கலம் ஊராட்சி, பெரியார்
சமத்துவபுரம் பகுதியில், புதிய நாடக மேடை அமைக்கும் பணி,, மண்மங்கலம் ஊராட்சி, மேதி நகர் பகுதியில், புதிய சமுதாயக் கூடம்,, மண்மங்கலம் ஊராட்சி, கிழக்கூர், கிழக்கூர் முதன்மை சாலையில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி,
கரூர் சட்டமன்றத் தொகுதி, மண்மங்கலம் ஊராட்சி, அருள் லட்சுமி நகரில், சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணி, மண்மங்கலம் ஊராட்சி, ராமேஸ்வரப்பட்டியில் உள்ள மயான கொட்டகைக்கு சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, மண்மங்கலம் ஊராட்சி, குடுகுடுத்தானூரில் உள்ள மயான கொட்டகைக்கு சுற்றுச் சுவர் அமைக்கும் பணி , ஆகிய பணிகளை தொடங்கி வைத்தார்.