கரூர் மாவட்டம் குளித்தலை, கீழக்குறப்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 37. இவர் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார் வழக்கம் போல் இன்று நீதிமன்ற பணிக்கு வந்துள்ளார். தனது மனைவி முருகவள்ளி செல்போன் மூலம் யாரோ சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு பார்ப்பதாக கூறியுள்ளார்.
அதனையடுத்து அங்கிருந்து அவரின் கணவர் செல்வதற்குள் மர்ம நபர் வீடு புகுந்து முருகவள்ளியின் கையில் கத்தியால் கீறி கழுத்தில் இருந்த முக்கால் பவுன் மாங்கல்யத்தை அறுத்துக் கொண்டு பல்சர் பைக்கில் தப்ப முயன்ற போது அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து வீடு புகுந்து மாங்கல்ய கயிறை அறுத்த திருப்பூர் மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்த நவீன் சுந்தர் 21 மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் நவீன் சுந்தர் மீது குன்றத்தூர் காவல் நிலையத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

