Skip to content

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது – எஃப்.ஐ.ஆர் தகவல்களும் வெளியானது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிஐ குழுவினர் கடந்த 17-ம் தேதி கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 23-ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்), நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிபிஐ தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவெக தரப்பு வழக்கறிஞர் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவின் அடிப்படையில், கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு, கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த எஃப்.ஐ.ஆர்-ல் ஏற்கனவே, கரூர் நகர காவல் நிலையத்தில் குறிப்பிட்டது போலவே, ஏ1 மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஏ2 புஸ்ஸி ஆனந்த், ஏ3 நிர்மல் குமார் உள்ளிட்டோர் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!