தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் நேற்று 3.50 மணியளவில் அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்து வரும் கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் வயது 53 என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த நிலையில் அந்த மாணவி வீட்டுக்கு சென்றவுடன் இது பற்றி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் இன்று மாலை 3 .30 மணி அளவில் காவல்

நிலையத்திற்கு போன் மூலம் புகார் தெரிவித்துவிட்டு பள்ளி முன்பு மற்ற பள்ளி மாணவ மாணவிகளுடன் அவரவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை பெற்றோர்கள் முற்றுகையிட்டு அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி மிகவும் பதட்டமாக உள்ளது.

