Skip to content

பிரபல பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்

தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். இவரது தந்தை சிவசங்கு தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சிவசங்குவிற்கு 7 மகன்கள், 1 மகள். சினேகன் தான் கடைசி மகன் (8வது பிள்ளை). பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (101) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவரது தந்தை இறந்தது குறித்து, சினேகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நட்புக்குறிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் / அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமாகி விட்டார் என்ற துயர தகவலை தெரிவித்து கொள்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!